Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2026

Posted on: 30th May 2026

தனுசு ராசி குரு பெயர்ச்சி 2026

குரு பெயர்ச்சி 2026: 02 ஜூன் 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

எட்டாம் வீடு மறைவு ஸ்தானம் என்றாலும், அங்கு குரு உச்சம் பெறுவதால் திடீர் தன லாபம், பரம்பரை சொத்து, காப்பீட்டுத் தொகை, அல்லது மறைமுகமான வழிகளில் (ஆராய்ச்சி, பங்குச்சந்தை) லாபம் கிடைக்கும்.

இந்த குருவின் நிலை நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தில் தீராத வியாதிகள் தீரும் தன்மையையும் தரும்.

குருவின் பார்வை பலன்கள் (தனுசு லக்னத்திற்கு)

5-ஆம் பார்வை (12-ஆம் வீடு - விரய ஸ்தானம்)

தேவையற்ற செலவுகள் குறையும். சுப காரியங்களுக்காகவும் (திருமணம், வீடு வாங்குதல்), புனித யாத்திரைக்காகவும் பணம் செலவாகும்.

7-ஆம் பார்வை (2-ஆம் வீடு - தன, குடும்ப ஸ்தானம்)

தன வரவு, பேச்சுத் திறமை, வாக்கு சித்தி – நீங்கள் பேசுவது பலிக்கும்.

9-ஆம் பார்வை (4-ஆம் வீடு - சுக, வாகன, மாத்ரு ஸ்தானம்)

புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு மாற்றங்கள் (மாற்று வீடு) சிறப்பாக அமையும். தாயார் நலன், மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

குறிப்பு:

வேலையில் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் வரலாம், வயிறு, கல்லீரல் தொடர்பான சிறிய ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து நீங்கும் (சத்தான உணவு அவசியம்), மற்றவர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நவகிரக ஸ்தலங்களில் குரு பகவானுக்குரிய கோவிலான ஆலங்குடி கோவில் குரு பகவானை தரிசனம் செய்வது விசேஷம். கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.

சுபகாரியங்களைத் தொடங்க உகந்த நேரத்தைத் தேர்வு செய்ய நமது இன்றைய நல்ல நேரம் அல்லது இன்றைய ஹோரை பக்கத்தைப் பாருங்கள்.