Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2026

Posted on: 30th May 2026

கும்பம் ராசி குரு பெயர்ச்சி 2026

குரு பெயர்ச்சி 2026: 02 ஜூன் 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு குரு ஆறாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். 6-ம் இடம் என்பது சத்ரு ஸ்தானம் என்பதால் எதிரிகளால் இதுவரை இருந்த தொல்லைகள் அகலும். வயிறு, ஜீரண உறுப்புகள், குடல் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்பட்டவர்களுக்கு படிப்படியாக குணமாகும். மறைமுகமான எதிரிகள் மூலமாக வந்த மனக்கவலைகள் விலகும். வம்பு, வழக்கு, கடன் தொல்லைகள் விலகும்.

குருவின் பார்வை பலன்கள் (கும்ப லக்னத்திற்கு)

5-ஆம் பார்வை (10-ம் வீடு - தொழில் ஸ்தானம்)

தொழில்களில் இருந்த சிக்கல்கள் அகலும். நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றி காணுவீர்கள். புதிய தொழில் தொடக்கம் சிறப்பாக அமையும். சமூகத்தில் புகழ், அந்தஸ்து பெருகும். தலைமை பொறுப்புகள் தேடி வரும். இடம் மாற்றத்தால் நல்ல வெற்றிகள் அடைவீர்கள்.

7-ஆம் பார்வை (12-ம் வீடு - விரய ஸ்தானம்)

குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகள், வீண் அலைச்சல்கள் அகலும். வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளியூர் சுற்றுலா செல்வதன் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

9-ஆம் பார்வை (2-ம் வீடு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானம்)

நீங்கள் கொடுத்த வாக்கை வெற்றிகரமாக காப்பாற்றுவீர்கள். உங்கள் பேச்சாற்றலால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் அகலும். குடும்பத்தில் செல்வாக்கு பெருகும்.

குறிப்பு:

நவகிரக ஸ்தலங்களில் குரு பகவானுக்குரிய கோவிலான ஆலங்குடி கோவில் குரு பகவானை தரிசனம் செய்வது விசேஷம். கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.

சுபகாரியங்களைத் தொடங்க உகந்த நேரத்தைத் தேர்வு செய்ய நமது இன்றைய நல்ல நேரம் அல்லது இன்றைய ஹோரை பக்கத்தைப் பாருங்கள்.