
குரு பெயர்ச்சி 2026: 02 ஜூன் 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
மகரம் ராசிக்கு குரு ஏழாம் வீடாகிய களத்திர ஸ்தானத்தில் (கடகம்) உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனைகள், மனக்கசப்புகள் அகலும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். பிறப்புறுப்பு, கிட்னி, கர்ப்பப்பை இதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவை நிவர்த்தி ஆகும். நட்பு வட்டாரம் மற்றும் சமூகத்தில் லாபம் கிடைக்கும்.
குருவின் பார்வை பலன்கள் (மகரம் லக்னத்திற்கு)
5-ஆம் பார்வை (11-ம் வீடு - லாப ஸ்தானம்)
குடும்பத்தில் பண வரவு அதிகரிக்கும், மூத்த சகோதரர்களால் லாபம் உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும், பல வழிகளில் கிடைக்கும் லாபம். மருமகன் / மருமகள் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.
7-ஆம் பார்வை (1-ம் வீடு - சுய ஸ்தானம்)
மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நீங்கும், கல்வி அறிவு மேம்படும், இதுவரை இருந்த மனக்கவலைகள் நீங்கி வாழ்க்கையில் தெளிவான முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள்.
9-ஆம் பார்வை (3-ம் வீடு - தைரிய, வீரிய ஸ்தானம்)
நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். இளைய சகோதரர்கள் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அவர்களால் லாபம் அதிகரிக்கும். உடலில் தைரியம், வீரியம் அதிகரிக்கும்.
குறிப்பு:
நவகிரக ஸ்தலங்களில் குரு பகவானுக்குரிய கோவிலான ஆலங்குடி கோவில் குரு பகவானை தரிசனம் செய்வது விசேஷம். கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.
சுபகாரியங்களைத் தொடங்க உகந்த நேரத்தைத் தேர்வு செய்ய நமது இன்றைய நல்ல நேரம் அல்லது இன்றைய ஹோரை பக்கத்தைப் பாருங்கள்.