Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2026

Posted on: 30th May 2026

மீனம் ராசி குரு பெயர்ச்சி 2026

குரு பெயர்ச்சி 2026: 02 ஜூன் 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

மீனம் ராசிக்கு (லக்னம்) குரு பகவான் 5-ம் வீடான கடகத்தில் உச்சம் பெற்று அமர்வது மிகச்சிறந்த அமைப்பாகும். 5-ம் இடம் புத்திர, பூர்வ புண்ய, கல்வி மற்றும் புத்தி ஸ்தானம் என்பதால், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பான முன்னேற்றம், ஆன்மீக சாதனை மற்றும் ஆராய்ச்சி/கலைத்துறை வெற்றி கைகூடும்.

5-ம் இட பலன்கள் (புத்திர / பூர்வ புண்ய ஸ்தானம்)

  • குழந்தை பாக்கியம்: குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடும்.
  • கல்வி & புத்தி: மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம், போட்டித் தேர்வுகளில் வெற்றி.
  • கலை & ஆராய்ச்சி: கலை, இசை, ஆராய்ச்சி, எழுத்துத் துறையில் வெற்றி.
  • ஆன்மீகம்: பூர்வ புண்ய பலன்கள் கிட்டும், மந்திர சித்தி கிடைக்கும்.

குருவின் பார்வை பலன்கள் (மீனம் லக்னத்திற்கு)

5-ஆம் பார்வை (9-ம் வீடு - பாக்ய ஸ்தானம்)

பூர்வீக சொத்து கைகூடும், தந்தை வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடும். புனித யாத்திரைகள் செல்வதன் மூலம் கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். தந்தை வழி முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

7-ஆம் பார்வை (11-ம் வீடு - லாப ஸ்தானம்)

குடும்பத்தில் பண வரவு அதிகரிக்கும், மூத்த சகோதரர்களால் லாபம் உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

9-ஆம் பார்வை (1-ம் வீடு - சுய ஸ்தானம்)

மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நீங்கும், கல்வி அறிவு மேம்படும், இதுவரை இருந்த மனக்கவலைகள் நீங்கி வாழ்க்கையில் தெளிவான முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள்.

குறிப்பு:

நவகிரக ஸ்தலங்களில் குரு பகவானுக்குரிய கோவிலான ஆலங்குடி கோவில் குரு பகவானை தரிசனம் செய்வது விசேஷம். கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.

சுபகாரியங்களைத் தொடங்க உகந்த நேரத்தைத் தேர்வு செய்ய நமது இன்றைய நல்ல நேரம் அல்லது இன்றைய ஹோரை பக்கத்தைப் பாருங்கள்.