
குரு பெயர்ச்சி 2026: 02 ஜூன் 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு கடகத்தில் (விருச்சிக ராசிக்கு 9-ம் இடம்) உச்சம் பெற்று அமர்வது, விருச்சிக ராசிக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை தரும். செல்வச் செழிப்பு, தொழில் வளர்ச்சி, பூர்வீகச் சொத்து சேர்க்கை, மற்றும் நீண்ட காலத் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் கைகூடும். 5, 7, 9-ம் பார்வைகளால் குடும்ப மகிழ்ச்சி, பிள்ளைகளால் பெருமை, தர்ம காரியங்கள் மற்றும் வெளிநாட்டு யோகம் உண்டாகும்.
குருவின் பார்வை பலன்கள் (விருச்சிக லக்னத்திற்கு)
ஐந்தாம் பார்வை (1-ம் இடம் - ராசி)
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், மனத் தெளிவு, உடல்நலம், மற்றும் ஆளுமைத் திறன் கூடும்.
ஏழாம் பார்வை (3-ம் இடம் - முயற்சி / உடன்பிறப்பு)
உடன்பிறந்தவர்களால் ஆதரவு, தைரியமான முடிவுகள் மற்றும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ஒன்பதாம் பார்வை (5-ம் இடம் - பூர்வ புண்ணியம் / பிள்ளை)
குழந்தை பாக்கியம், பிள்ளைகளின் உயர்கல்வி/வேலை, பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் தன் வாரிசுகளின் தொடர்பான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குறிப்பு:
நவகிரக ஸ்தலங்களில் குரு பகவானுக்குரிய கோவிலான ஆலங்குடி கோவில் குரு பகவானை தரிசனம் செய்வது விசேஷம். கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.
சுபகாரியங்களைத் தொடங்க உகந்த நேரத்தைத் தேர்வு செய்ய நமது இன்றைய நல்ல நேரம் அல்லது இன்றைய ஹோரை பக்கத்தைப் பாருங்கள்.