தமிழ் மக்கள் வாழ்வில் தங்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தங்கம் வெறும் உயர்மதிப்புள்ள பொருள் மட்டும் அல்ல அது நம் செழிப்பு, சந்தோஷம், அதிஷ்டம் போன்றவையோடு தொடர்புடையது. தங்கம் வாங்க பல காரணங்கள் உள்ளன. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்காக வாங்குவோம், ஏதேனும் விழாக்களுக்காக வாங்குவோம். பெரும்பாலும் நம்முள் பலர் சேமிப்பிற்காக மட்டுமே வாங்குவோம்.
எந்த நோக்கத்தோடு வாங்கினாலும் நல்ல நாள் பார்த்து வாங்குவது தான் நம் வழக்கம். அப்படி நல்ல நாள் தேர்ந்தெடுக்க கிழமை பாப்போம் அல்லது நட்சத்திரம் பார்ப்போம் அல்லது திதி பார்த்து வாங்குவோம். நேர்மறை விளைவுகள் தரும் நாள் பார்த்து தங்கம் வாங்குவோம்.
இந்த பதிவில் 2025ஆம் ஆண்டில் உள்ள தங்கம் வாங்க உகந்த நாட்களை கொடுத்துள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள தேதிகள் அனைத்தும் கிழமை மற்றும் நட்சத்திரம் இணைந்து நல்ல பலனை தரும் நாட்கள் ஆகும்.
உங்கள் கவனத்திற்கு - இந்த தேதிகளில் மட்டும் தான் தங்கம் வாங்க வேண்டும் என்பது பொருள் இல்லை. உங்கள் மனதிற்கு திருபிக்கறமாகவும் நெருக்கமாகவும் இருக்கும் தேதிகளிலும் வாங்கலாம். ஆனால் இந்த தேதிகளில் தங்கம் வாங்கும் பொழுது அது பல மடங்காகும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கை.
2025ல் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தேதிகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளுங்கள். உங்கள் இல்லங்களில் தங்கம் பெறுக தமிழ்நாள்காட்டி குழு சார்பாக வாழ்த்துக்கள்!!