Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

மருத்துவம் தொடங்க நல்ல நாட்கள் - 2025

நம் குடும்பத்தில் எவரேனும் ஒருவருக்கு உடல் நலத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கூட அது நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவலையில் ஆழ்த்தும். அவர்கள் சீக்கிரமே குணமடைய வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கும். அவ்வாறு சீக்கிரம் குணமடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் மருத்துவம் அல்லது மருந்துண்ண தொடங்குவது நல்ல பலனை தரும். அதாவது சீக்கிரம் குணமடைய, உடல் நலம் தேறி வர அல்லது மருத்துவம் தொடங்கிய காரணத்திற்கான முழு பலனையளிக்கும்.

இந்த பதிவில் 2025ஆம் ஆண்டில் உள்ள மருத்துவம் அல்லது மருந்துண்ண தொடங்க உகந்த நாட்களை கொடுத்துள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள தேதிகள் அனைத்தும் கிழமை மற்றும் நட்சத்திரம் இணைந்து நல்ல பலனை தரும் நாட்கள் ஆகும்.

உங்கள் கவனத்திற்கு - இந்த நாட்களில் மட்டும் தான் மருத்துவம் தொடங்கவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மருத்துவரிடம் தேதி குறித்து ஆலோசித்தபின் முடிவெடுப்பதே சிறந்தது. உடனடியாக தொடங்க வேண்டுமா நிதானமாக நாள், நேரம் பார்த்து தொடங்கலாமா என்பது மருத்துவருக்கு தான் நன்கு தெரியும். அதனால் பிரச்சனையின் வீரியத்தை பொறுத்து தேதி முடிவு செய்வது நல்லது.