Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

ஆசிரியர் கொடுத்த மதிப்பெண்

பேராசிரியர் ஒருவர் மூன்று கேள்விகளை மாணவர்களிடம் கொடுத்து ஏதேனும் ஒன்றுக்கு பதில் எழுதித் தர சொன்னார். அதில் மிகவும் கடினமான கேள்விக்கு 100 மதிப்பெண்ணும், கொஞ்சம் கடினமான கேள்விக்கு 80 மதிப்பெண்ணும், சுலபமான கேள்விக்கு 50 மதிப்பெண்ணும் தந்து இருந்தார். தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத் தாள்களின் விடைகளை பார்க்காமல் மிகவும் கடினமான கேள்வியை தேர்வு செய்தவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தவர்களுக்கு இரண்டாம், மூன்றாம் நிலையும் தந்தார். மாணவர்களோ "பதிலை பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே?" என்று கேட்க, பேராசிரியரோ "உங்கள் பதிலுக்காக நான் இந்த தேர்வை வைக்கவில்லை. உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்த தேர்வை வைத்தேன். கடினப்பட்டு உழைப்பவர்களே அனைத்திலும் முதல் நிலை அடைவார்கள்" என்று சொல்லி முடித்தார். ஆம்!!! விடாமுயற்சியுடன், சலியாத உழைப்பும் இருந்தால் மிகவும் கடினமான செயல்களை எளிதில் வெல்லலாம்.