Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

புத்திசாலி மனைவி

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து சேமித்து வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன மனைவியை அழைத்து "நான் இறந்துவிட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு" என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக்கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார். அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது அந்த நேர்மையான மனைவி, "கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையை வைத்து மூட செய்தால். அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி "நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா" என்று கேட்டாள். அதற்கு அந்த நேர்மையான மனைவி.......... "அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்துவிட்டு மாற்றவா முடியும்? அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டுவிட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்துவிட்டேன்.அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றாள். 🤣🤣🤣🤣

Other Stories
வீண் பழி போடாதே!
கோபத்தின் கதை
நம்பிக்கை
நல்லதையே செய்வோம்......!
தன்னம்பிக்கை கதை
அலட்சியம் வேண்டாம்
நிதானம் அவசியம்
அரண்மனை எலி
மறப்போம். மன்னிப்போம்
எல்லாம் விதிப்படி
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்??
கட்டுப்பாடு வேண்டும்
வாழ்ந்துதான் பார்ப்போமே!
உங்களாலும் முடியும்
நம்பிக்கையா? அதிஷ்டமா ?
காலம் பதில் சொல்லும்
புத்திசாலி மனைவி
வினை விதைத்தவன்… வினை அறுப்பான்
தான தர்மம்
திருவாசகம்
மரம் வளர்போம்
ஆசிரியர் கொடுத்த மதிப்பெண்
காலம் ஒரு சக்கரம்
உழைப்பின் அருமை
மனச்சுமை
பயமே ஒரு வியாதி
குப்பையை குறை
கழுகின் மறுபிறவி
எதிரொலி
வாய்ப்புகள் விலகும்போது
புத்தி தடுமாறும் விபத்து
இறப்பு ஏன் முக்கியமானது?