எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே "தொப்பையை குறை" என்று மருத்துவர்ஆலோசனை செய்தார். அன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது. முகம் மட்டும் அழகாக வில்லை. மீண்டும் வருத்ததுடன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே "எல்லோரும் அழகா இருக்காங்க. நா மட்டும் அழகில்லை. மற்றவர்களை விட அழகாக வேண்டும். ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி "குப்பையை குறை" என்றார் . ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார். ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார். ஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை *"நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான்"*. அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.