Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home
  • Today Horai

நல்லதையே செய்வோம்......!

தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்து கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புது துணியை எடுத்தார் ....... அதை அழகிய பளபளக்கும் புதிய கத்தரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலை கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் "அப்பா! கத்தரிக்கோல் விலை உயர்ந்தது, அழகானது. " அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது..... மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே.... அது ஏன்..?" என்று கேட்டான். அதற்கு அவர் "நீ சொல்வது உண்மை தான்..... கத்தரிக்கோல் அழகாகவும்..... மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது.... அதாவது பிரிப்பது! ஆனால், ஊசி சிறியதாகவும் மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவருடைய உருவத்தை வைத்தோ, பணத்தை வைத்தோ அல்ல". நல்லதையே செய்வோம்......! நல்லவர்களாக வாழ்வோம்......!!