Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

நம்பிக்கையா? அதிஷ்டமா ?

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்கை நடத்தி வந்தான். ஒரு நாள் தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால் 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்'என்று நினைத்தான். அந்தக் காசை தன் கோட்டு பையில் போட்டுக்கொண்டான். அன்று அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என்று நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்க மாட்டான். சில ஆண்டுகளில் பணம்,பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்கு பின், ஒரு நாள் தன் மனைவியிடம், "அந்த காசை பார்க்கவேண்டும் போலுள்ளது" என்றவாறு கோட்டு பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிரிச்சி! அந்த காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?' என்ற குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், "என்னை மன்னியுங்கள், உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது.எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசை போட்டு வைத்தேன்" என்றாள். "இது எப்போது நடந்தது?" என்று கேட்டான். "அந்த காசு கிடைத்த மறுநாளே" என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான்...... 'உண்மையில் அதிஷ்டத்தை கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்' என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்.

Other Stories
வீண் பழி போடாதே!
கோபத்தின் கதை
நம்பிக்கை
நல்லதையே செய்வோம்......!
தன்னம்பிக்கை கதை
அலட்சியம் வேண்டாம்
நிதானம் அவசியம்
அரண்மனை எலி
மறப்போம். மன்னிப்போம்
எல்லாம் விதிப்படி
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்??
கட்டுப்பாடு வேண்டும்
வாழ்ந்துதான் பார்ப்போமே!
உங்களாலும் முடியும்
நம்பிக்கையா? அதிஷ்டமா ?
காலம் பதில் சொல்லும்
புத்திசாலி மனைவி
வினை விதைத்தவன்… வினை அறுப்பான்
தான தர்மம்
திருவாசகம்
மரம் வளர்போம்
ஆசிரியர் கொடுத்த மதிப்பெண்
காலம் ஒரு சக்கரம்
உழைப்பின் அருமை
மனச்சுமை
பயமே ஒரு வியாதி
குப்பையை குறை
கழுகின் மறுபிறவி
எதிரொலி
வாய்ப்புகள் விலகும்போது
புத்தி தடுமாறும் விபத்து
இறப்பு ஏன் முக்கியமானது?