Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

புத்தி தடுமாறும் விபத்து

ஒரு மதகுரு வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக, மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப்பெண், எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார். இப்போது குருவின் முறை வந்தது. அவரிடமும் பணிப் பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். பணிப் பெண், "ஐயா, எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார். மதகுரு, "அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம்" என்றார். பணிப்பெண் விடவில்லை. "உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள்" என்றார். அப்போதும் மதகுரு ஏற்றுக் கொள்ளவில்லை. பணிப் பெண் கடைசியாகச் சொன்னார், "இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன்". குரு சொன்னார், "அம்மா, நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்". அவர் அப்படிச் சொன்னதும் பணிப்பெண் ஆடிப்போனார். "ஐயோ, பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்...? இதை அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே. இத்தனை உயிர்கள் பறிபோகுமே" என்று பதறினார். குரு சொன்னார், "சகோதரி, வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால் புத்தி தடுமாறி விபத்து நேரிடும்.....

Other Stories
வீண் பழி போடாதே!
கோபத்தின் கதை
நம்பிக்கை
நல்லதையே செய்வோம்......!
தன்னம்பிக்கை கதை
அலட்சியம் வேண்டாம்
நிதானம் அவசியம்
அரண்மனை எலி
மறப்போம். மன்னிப்போம்
எல்லாம் விதிப்படி
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்??
கட்டுப்பாடு வேண்டும்
வாழ்ந்துதான் பார்ப்போமே!
உங்களாலும் முடியும்
நம்பிக்கையா? அதிஷ்டமா ?
காலம் பதில் சொல்லும்
புத்திசாலி மனைவி
வினை விதைத்தவன்… வினை அறுப்பான்
தான தர்மம்
திருவாசகம்
மரம் வளர்போம்
ஆசிரியர் கொடுத்த மதிப்பெண்
காலம் ஒரு சக்கரம்
உழைப்பின் அருமை
மனச்சுமை
பயமே ஒரு வியாதி
குப்பையை குறை
கழுகின் மறுபிறவி
எதிரொலி
வாய்ப்புகள் விலகும்போது
புத்தி தடுமாறும் விபத்து
இறப்பு ஏன் முக்கியமானது?