Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home

தன்னம்பிக்கை கதை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்.கோட்டைக் கதவுகளைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கைகள் வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். 'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள். அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும், உயிரில்லையே' என்று கூறி விட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டை கதவுகளில் தாழ்பாள் போடப்படவில்லை. திறந்து தான் இருந்தது. பல பேர் இப்படி தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள். அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.