Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

உங்களாலும் முடியும்

இந்த யானையின் காலில் சங்கிலி கட்டியுள்ளீர்களே அதை அது அறுத்துக் கொண்டு போக முடியாத என்று சிறுவன் கேள்வி கேட்டான். அதற்கு யானைப் பாகன் கூறினார்..... அதனால் அறுத்து கொண்டு போக முடியும் ஆனால் அப்படி போகாது என்றார். ஏன் என்று கேட்ட போது அந்த யானை குட்டியாக இருந்த போதும் இதே போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்களாம். அந்த குட்டியும் அதை அறுத்து கொண்டு ஓட எத்தனிக்குமாம். ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம். நம்மலால் முடியாது என்றொரு மைண்டட்செட்டுக்கு வந்து விடுமாம். அதே குட்டி வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம். சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டப்பட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம். காலில் கட்டப்பட்டிருந்தால் அங்கேயே நின்று கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது. இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.... நமக்கும் பொருந்தக்கூடியதே. எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம். அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும், "போச்சு", "அவ்வளவு தான்", என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடைய முடியாமல் விட்டு விடுகிறோம். ஒரு வகையில் நாமும் அந்த யானையை போலதான். எளிதாக அறுத்து விடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்க முடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கை குறைவிலேயே இருந்து விடுகிறதோ....... அதே போல நாமும் பல சந்தர்ப்பங்களில் நம்மால் முடியாது, நமக்கு சரிப்பட்டு வராது, நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற அவநம்பிக்கையே நாம் மேலே வர பெருந்தடையாக அமைந்து விடுகின்றன.

Other Stories
வீண் பழி போடாதே!
கோபத்தின் கதை
நம்பிக்கை
நல்லதையே செய்வோம்......!
தன்னம்பிக்கை கதை
அலட்சியம் வேண்டாம்
நிதானம் அவசியம்
அரண்மனை எலி
மறப்போம். மன்னிப்போம்
எல்லாம் விதிப்படி
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்??
கட்டுப்பாடு வேண்டும்
வாழ்ந்துதான் பார்ப்போமே!
உங்களாலும் முடியும்
நம்பிக்கையா? அதிஷ்டமா ?
காலம் பதில் சொல்லும்
புத்திசாலி மனைவி
வினை விதைத்தவன்… வினை அறுப்பான்
தான தர்மம்
திருவாசகம்
மரம் வளர்போம்
ஆசிரியர் கொடுத்த மதிப்பெண்
காலம் ஒரு சக்கரம்
உழைப்பின் அருமை
மனச்சுமை
பயமே ஒரு வியாதி
குப்பையை குறை
கழுகின் மறுபிறவி
எதிரொலி
வாய்ப்புகள் விலகும்போது
புத்தி தடுமாறும் விபத்து
இறப்பு ஏன் முக்கியமானது?