Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

வாழ்ந்துதான் பார்ப்போமே!

ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம். ஆம், முயல் என்ன செய்யும் பாவம்! ஒரு பக்கம் வேடன் விரட்டுகிறான், இன்னொரு பக்கம் நாய்..... மற்றொரு பக்கம் புலி.... என எந்த பக்கம் திரும்பினாலும் எதிரிகள் துரத்துகிறார்கள். சரி, இனி நாம் வாழத் தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது முயல், பின்னர் எப்படியெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்தது...... இறுதியாக குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று எண்ணி குளத்திற்குச் சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின. அதை கண்ட முயல் சிந்தித்தது...... "அட!!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா ?? " என்று ஆச்சர்யப்பட்டு தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னபிக்கையோடு வாழ ஆரம்பித்ததாம். தற்கொலை செய்து கொள்வதற்குக் கூட வலிமையான மனம் வேண்டும் , அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நாம் ஏன் மாய்த்துக் கொள்வது பற்றி எண்ண வேண்டும்?? வாழ்ந்துதான் பார்ப்போமே!!!!

Other Stories
வீண் பழி போடாதே!
கோபத்தின் கதை
நம்பிக்கை
நல்லதையே செய்வோம்......!
தன்னம்பிக்கை கதை
அலட்சியம் வேண்டாம்
நிதானம் அவசியம்
அரண்மனை எலி
மறப்போம். மன்னிப்போம்
எல்லாம் விதிப்படி
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்??
கட்டுப்பாடு வேண்டும்
வாழ்ந்துதான் பார்ப்போமே!
உங்களாலும் முடியும்
நம்பிக்கையா? அதிஷ்டமா ?
காலம் பதில் சொல்லும்
புத்திசாலி மனைவி
வினை விதைத்தவன்… வினை அறுப்பான்
தான தர்மம்
திருவாசகம்
மரம் வளர்போம்
ஆசிரியர் கொடுத்த மதிப்பெண்
காலம் ஒரு சக்கரம்
உழைப்பின் அருமை
மனச்சுமை
பயமே ஒரு வியாதி
குப்பையை குறை
கழுகின் மறுபிறவி
எதிரொலி
வாய்ப்புகள் விலகும்போது
புத்தி தடுமாறும் விபத்து
இறப்பு ஏன் முக்கியமானது?