Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி
    Home
  • Today Horai

எல்லாம் விதிப்படி

எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அடடா இந்த குருவிக்கு கேடு காலம் வந்து விட்டதை உணர்ந்த கருட பகவான் உடனடியாக அந்த குருவியை தூக்கிக்கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த மரப் பொந்தில் பாதுகாப்பாக வைத்தது. அந்த பொந்தில் வசித்து வந்த பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் குருவியை விழுங்கிவிட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று வருந்தியது கருட பகவான். இதை கவனித்த எமதர்மராஜன். " நான் அந்த குருவியை உற்று நோக்க காரணம் அந்தக் குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. அது எப்படி நிகழப் போகிறது என்பதை யோசித்து கொண்டிருந்தேன். அதற்குள் விதிப்படியே நடந்துவிட்டது" என்று கூறினார். வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுகொண்டே இருக்காமல், வாழ்க்கையை வாழுங்கள்......!!!